என் பொண்ணு தம் அடிச்சா உனக்கென்ன விசித்ரா!! வரிந்து கட்டிக்கொண்டு வந்த வனிதா!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடுமையாக ஜோவிகா மற்றும் விசித்ரா மோதிவரும் நிலையில், அது குறித்து வனிதா காரசாரமாக கருத்து தெரிவித்துள்ளார்.
ஜோவிகா - விசித்ரா
இந்த ஆண்டின் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி மொத்தமாக ஒரு வாரம் மட்டுமே முடிந்துள்ள நிலையில், தற்போதே வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவிற்கும், நடிகை விசித்ராவிற்கும் பெரும் சண்டைகள் வர துவங்கியுள்ளன.
கல்வி குறித்து ஏற்பட்ட இந்த மோதல் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அது குறித்து முன்னாள் பிக் பாஸ் கண்டஸ்டண்டான வனிதா விஜய்குமார் காரசாரமாக பேசி விசித்ராவிற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
உங்க வேலைய பாருங்க விசித்ரா
இது பற்றிய வனிதா பேசியது வருமாறு - பிக் பாஸ் வீட்ல இருக்க பொண்ணுங்க டாட்டூ போடுது, தம் அடிக்குது. இது எல்லாம் அவங்க பெற்றோர்கள் பாத்துப்பாங்க. ஆனா அங்க இருக்கிற பிள்ளைங்களை எல்லாம் நீங்கதான் பெத்து பிள்ளைகள் மாதிரி ஓவரா அக்கறை காட்ட வேண்டாம். பிக் பாஸிற்கு வந்த பிள்ளைகளை எல்லாம் உங்களுக்கு என்ன நேந்தா விட்டிருக்காங்க.
நீங்கள் மூன்று பசங்களோட அம்மாவாக இருக்கலாம் அதற்காக பிள்ளைகளை ஓவரா கரெக்ஷன் பண்ண வேண்டாம் என்றார்.
நீங்க முதலில் உங்க பிள்ளைங்களை பாருங்க. எதுக்காக நீங்க 100 நாள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தீங்களோ அந்த வேலையை மட்டும் பாருங்க தேவை இல்லாமல் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்காதீர்கள் என தாறுமாறாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.