நடிகர் விஷாலுக்கு விரைவில் கல்யாணம்...? - பொண்ணு யார் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்

Vishal
By Nandhini Jul 07, 2022 11:31 AM GMT
Report

அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில், நடிகர் விஷாலின் முதல் பான் இந்தியா படமாக ‘லத்தி’ உருவாகி வருகிறது. இதில், விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் விஷாலின் நண்பர்களான நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் நடைபெற்ற போது நடிகர் விஷால் கையில் காயம் ஏற்பட்டது.

வரலட்சுமியுடன் காதல்

இதனால், படப்பிடிப்பு சில நாட்கள் ரத்தானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஷால், நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்குள்ளே மனக்கசப்பு ஏற்பட்டதால் காதல் பிரேக் அப் ஆனது. 

நிறுத்தப்பட்ட திருமணம்

இதனையடுத்து, இவர் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவரை காதலித்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. ஆனால், இந்த திருமணமும் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. 

விஷால் பேட்டி

தற்போது, நடிப்பில் கவனம் செலுத்தி வரும் விஷால், சமீபத்தில் திருமணம் குறித்து பேட்டியில் கூறியுள்ளார். அந்தப் பேட்டியில், அப்பா, அம்மா பாக்குற பொண்ணு எனக்கு செட் ஆகுமான்னு தெரியல. நிச்சயம் லவ் மேரேஜ் தான் பண்ணுவேன். இப்போ லவ் பண்ணிட்டு தான் இருக்கேன். விரைவில் அந்த பொண்ணு யார்னு சொல்றேன் என்று கூறியிருக்கிறார்.       

Vishal

நேரலையில் காலை தூக்கிய பிபிசி நெறியாளர் : வைரலாகும் வீடியோ