நேரலையில் காலை தூக்கிய பிபிசி நெறியாளர் : வைரலாகும் வீடியோ

By Irumporai Jul 07, 2022 10:40 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பிபிசி நேரலையின் போது செய்திதொகுப்பாளர் மேஜையில் கால்வைத்தபடி செல்போனை பார்த்து கொண்டிருந்த சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலமையில் உள்ள அமைச்சர்கள் தங்கள் பதவியினை ராஜினாம செய்து வருகின்றனர், இந்த சம்பவங்களால் போரிஸ் ஜான்சன் கடும் நெருக்கடியினை சந்தித்துள்ளார்.

நேரலையில் நெறியாளர் செய்த செயல்

ஆகவே போரிஸ் ஜான்சன் குறித்த அரசியல் நிகழ்வுகள்தான் இங்கிலாந்தில் உள்ள ஊடகங்களில் தலைப்பு செய்தியாக உள்ளது. அந்த வகையில் புகழ் பெற்ற பிபிசி செய்தியில் போரிஸ் ஜான்சன் அமைச்சர்வையில் உள்ள அமைச்சர்கள் ராஜினாமா குறித்த செய்தியினை நேரலையினை பிரபல செய்தியாளர் டிம் வில்காக்ஸ் நேரலையில் விளக்கி வந்தார் .

வைரலாகும் வீடியோ

அப்போது நேரலையில் நிரூபர் ஒருவர் அரசியல் கள நிலவரங்களை கூறி வருகின்றார் அப்போது கேமார செய்தி அரங்கத்தை காண்பிக்கும் போது . செய்தியினை தொகுத்து வழங்கும் நெறியாளர் டிம் வில்காக்ஸ் ரிலாக்ஸாக இருந்த படி அருகில் இருந்த மேஜையில் காலினை வைத்தபடி தனது செல்போனை பார்த்தபடி இருந்துள்ளார்.

நேரலையில் காலை தூக்கிய பிபிசி நெறியாளர் : வைரலாகும் வீடியோ | Bbc Presenter Scrolling On Phonedesk

அவர் (on air)நிகழ்ச்சிக்கு செல்கிறோம் என்பதை உணர்ந்து சற்று பதட்டம் அடைந்து இயல்பு நிலைக்கு திரும்புகின்றார், இது நேரலையில் சில விநாடிகள் வந்தாலும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இணைய வாசிகள் பலரும் நகைச்சுவையான மற்றும் கோபமான கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்