விஷாலுக்கும்- தன்ஷிகாவுக்கும் இத்தனை வயது வித்தியாசமா? அவரே தந்த விளக்கம்

Vishal Dhansika Tamil Cinema Marriage
By Sumathi May 20, 2025 09:00 AM GMT
Report

விஷால் - தன்ஷிகா தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

விஷால் - தன்ஷிகா 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் மதகஜராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

dhanshika - vishal

சமீபத்தில், விழுப்புரத்தில் நடந்த திருநங்கை அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டார். அப்போது மேடையில் நின்றுகொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். அந்த சம்பவம் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனுஷுடன் ஆர்த்தி ரவி எடுத்த புகைப்படம்... புதிய புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா!

தனுஷுடன் ஆர்த்தி ரவி எடுத்த புகைப்படம்... புதிய புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா!

வயது வித்தியாசம்

தொடர்ந்து எனக்கு உடல்நிலை சரியில்லாததால்தான் நான் அப்படி காணப்பட்டேன் என விளக்கமளித்திருந்தார். தற்போது துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சாய் தன்ஷிகா நாயகியாக நடித்துள்ள ‛யோகி டா' படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது.

விஷாலுக்கும்- தன்ஷிகாவுக்கும் இத்தனை வயது வித்தியாசமா? அவரே தந்த விளக்கம் | Vishal Dhanshika Age Difference Wedding

இந்த விழாவில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதில் இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்தினர். மேலும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

விஷாலுக்கு 47 வயதாகிறது. தன்ஷிகாவிற்கு 35 வயது ஆகிறது. இருவருக்கும் 12 வயது வித்தியாசம் இருக்கிறது. ஆனால் இருவரும் 10 வருடங்களுக்கு மேலாக இருவரும் நண்பர்களாக பழகி வருவதாக தெரிவித்துள்ளனர்.