4 மாசத்துல கல்யாணம்; மணப்பெண் யார் தெரியுமா? விஷால் கொடுத்த அப்டேட்
நடிகர் விஷாலுக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷால்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் மதகஜராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில், விழுப்புரத்தில் நடந்த திருநங்கை அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டார். அப்போது மேடையில் நின்றுகொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். அந்த சம்பவம் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எப்போது திருமணம்?
தொடர்ந்து எனக்கு உடல்நிலை சரியில்லாததால்தான் நான் அப்படி காணப்பட்டேன் என விளக்கமளித்திருந்தார். தற்போது துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில்,
"நடிகர் சங்க கட்டித்தை கட்டி முடித்த பின் என்னுடைய திருமணம் நடக்கும். ஆக.15 ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கு அடுத்து என்னுடைய திருமணம் நடக்கும். பெண் பார்த்தாச்சு,
எல்லாம் பேசி முடிச்சாச்சு, இது ஒரு காதல் திருமணம் தான்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஆக.29 ஆம் தேதி பிறந்தநாள் என்பதால் திருமணம் பற்றி அறிவிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
