காலணி வீசினது தவறு தான் ஆனாலும்...! விஜய் சம்பவம் - அதிரடியாக சொன்ன விஷால்..!

Vijay Vijayakanth Vishal
By Karthick Jan 09, 2024 12:13 PM GMT
Report

நடிகர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த போது விஜய் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காலணி வீச்சு

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. பலரும் அவருக்கு தங்களது இதய அஞ்சலியை நேரில் சென்று செலுத்தி வந்தனர்.

vishal-comments-on-vijay-slipper-incident

நடிகர் விஜய்யும் அவருக்கு தனது இறுதி அஞ்சலியை கண்ணீர் மல்க நேரில் சென்று சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் செலுத்தினார். பெரும் கூட்டத்திற்கு மத்தியில் சென்ற விஜய் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பெரும் சங்கடத்தை பலருக்கும் ஏற்படுத்தியது.

விஷால் கருத்து

வெளிநாட்டில் இருந்து திரும்பிய விஷால் இன்று விஜயகாந்தின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தும் அவர் பேசினார்.

விஜய் மனைவி சங்கீதாவின் முன்னாள் காதலர் இந்த பிரபல நடிகரா..? தீயாய் பரவும் செய்தி..!

விஜய் மனைவி சங்கீதாவின் முன்னாள் காதலர் இந்த பிரபல நடிகரா..? தீயாய் பரவும் செய்தி..!

அப்போது விஜய் சம்பவம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், திரையுலகம் முன்னேற உதவியாக இருந்த நபருக்கும், தன்னுடைய கலை வாழ்க்கைக்கு உதவிய நபருக்கு அஞ்சலி செலுத்த தான் விஜய் வந்தார்.

vishal-comments-on-vijay-slipper-incident

அவர் மீது இப்படி நடந்தது என்பது தவறான விஷயம் தான், ஆனால், அவ்வளவு பெரிய கூட்டத்தில் இந்த மாதிரியான விஷயங்களை கட்டுப்படுத்துவது என்பது கடினம் என கூறினார் விஷால்.