ஆட்சியில் பங்கு தராவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் - மாவட்ட காங்கிரஸ் தீர்மானம்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடுகளில் தீவிரம் காட்டி வருகிறது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தொடர்ந்து கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஆனால், ஆட்சில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக அறிவித்து விட்டார்.
சில காங்கிரஸ் நிர்வாகிகள் தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்
இந்நிலையில், ஆட்சியில் பங்கு தராவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என விருதுநகர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து பேசிய மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெயிலுமுத்து, "திமுக அமைச்சர்களைப் பற்றி பேசும்போது எல்லோருக்கும் ரத்தம் கொதிக்கிறது. ஆனால் நம்ம பெருந்தலைவரைப் பற்றி பேசும்போது யாருக்கும் அந்த உணர்வு இல்லை.

நம் கட்சி வளர வேண்டுமென்றால் நாம் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். இதைத்தான் நம் எம்.பி. கேட்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது? இதை தான் நம் தலைவர் ராகுல்காந்தியும் வலியுறுத்துகிறார்.
அடுத்து விசில் தயாராக இருக்கிறது. நாம் போய்க்கொண்டே இருக்கும்போது விசில் அடித்துக்கொண்டு, கையை காட்டிக்கொண்டு முன்னேறலாம்.
திமுக கூட்டணி நமக்கு அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கவில்லை என்றால், யார் நமக்கு அதிகாரமும், அதிக சீட்டுகளும், மரியாதையும் வழங்குகிறார்களோ அந்தக் கூட்டணியில்தான் நாம் தொடர வேண்டும்" என பேசியுள்ளார்.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
யாழில் ஆலயம் செல்ல தனியாரின் காணிக்குள் பாதை அமைக்கும் இராணுவம் : காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு IBC Tamil