அச்சமில்லை அச்சமில்லை.. பாரதியார் வரிகளை பதிவிட்ட காங்கிரஸ் எம்பி
ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசிய நிலையில், பாரதியார் வரிகளை குறிப்பிட்டு எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மதுரை செயற்குழு கூட்டம்
மதுரையில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், எங்கள் பலம் இல்லாமல் நீங்கள்(திமுக) அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள்.
நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை, தோழமையாக இருக்கும் போது நாங்கள் கேட்பது என்னவென்றால் நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம்.
நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என்பது தான். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம் என்று தெரிவித்திருந்தார்.

செல்வபெருந்தகை சொல்வது என்ன?
இவரின் இந்த பேச்சு திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, மதுரை மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து எனக்கு தெரியாது.
பொதுவெளியில் கூட்டணியை பற்றி பேசக்கூடாது என ராகுல், கார்கே, வேணுகோபால் கூறியிருக்கின்றனர், அவர்களை விட பெரிய ஆட்கள் இருக்கிறார்களா என தெரியவில்லை. அகில இந்திய காங்கிரஸ் வழிகாட்டுதலுக்கு முரணாக யார் நடந்தாலும் அது தவறு தான் என தெரிவித்தார்.

பாரதியார் வரிகள்
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பதிவில், அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்ப தில்லையே என்ற பாரதியாரின் வரிகளை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) February 17, 2026