மாணவிக்கு முத்தமிட்டு ஸ்டேட்டஸ்; தலைமையாசிரியரை அடித்து இழுத்து சென்ற பெற்றோர்
மாணவிக்கு முத்தமிட்ட தலைமையாசிரியரை உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மாணவிக்கு முத்தம்
கடலூர் மாவட்ட விருத்தாசலம் அருகே எருமனூர் சாலையில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் 45 வயதான எடில் பெர்ட் பெலிக்ஸ்.
இவர் நேற்று மாணவி ஒருவருக்கு முத்தமிட்ட புகைப்படம் ஒன்றை தனது செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இந்த மாணவி அந்த பள்ளியில் கடந்த வருடம் படிப்பை முடித்துள்ளார்.
தாக்குதல்
அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானதையடுத்து, அதைபார்த்த மாணவியின் உறவினர் மற்றும் அந்த ஊர் இளைஞர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தலைமையாசிரியை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அவரது ஆடைகளை கிழித்து ஜட்டியுடன் பள்ளி வளாகத்திலிருந்து 500 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்றுள்ளனர்.
இதன் பின், தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் தலைமை ஆசிரியரை பொதுமக்களிடமிருந்து மீட்டு, பள்ளி வளாகத்திற்குள் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்பொழுது விருத்தாசலம் - எருமனூர் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டமாணவியின் உறவினர்கள், தலைமையாசிரியரை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த தாசில்தார் உதயகுமார், விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா ஆகியோர், பொதுமக்களிடம் சமாதானம் பேசியதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இன்று வழக்குபதிவு செய்யவில்லையெனில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.