விராட் கோலி, கம்பீர் மோதல்; கன்னத்தில் அறைந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன் - ஹர்பஜன் சிங்
விராட் கோலி, கம்பீர் வாக்குவாதம் செய்வது கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
லக்னோ - பெங்களூரு அணிகள் மோதல்
43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை எடுத்தது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. தொடக்க வீரரான கெயில் மையிஸ் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.
இதை தொடர்ந்து வந்த குர்னால் பாண்டியா 14 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ அணி 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.
விராட் கோலி - கம்பீர் மோதல்
இறுதியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்கு பின்னர் மைதானத்தில் இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் ஒருவரை ஒருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்பஜன் சிங் கருத்து
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், விராட் கோலி ஒரு ஜாம்பவான் இது போன்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது. விராட் மற்றும் கம்பீருக்கு இடையே என்ன நடந்ததோ அது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல எனவும் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
I Am Ashamed Of What I Did With Sreesanth In 2008. Virat Kohli Is A Legend, Should Not Get Involved In Such Things. Whatever Happened Between Virat And Gambhir Was Not Right For Cricket - https://t.co/7rgtdUKl4T pic.twitter.com/V1lW92pz8S
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 2, 2023