மைதானத்தில் தகராறு : விராட், கம்பீருக்கு 100% அபராதம்
நேற்றைய போட்டியில் விராட் கோலிக்கும் கெளதம் கம்பீரும் வாய் தகராறில் ஈடுபட்டதால் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100% அபராதம் விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது .
வாய் தகராறு
ஐபிஎல் தொடரின் 43 வது லீக் போட்டியில் ,பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியது. இதனிடையே, இப்போட்டியில் பெங்களூரு அணி சுலபமாக வெற்றி பெற்றாலும், களத்தில் விராட் கோலியின் கடும் ஆக்ரோஷம் நிறைந்து இருந்தது.
விராட் கோலி தகராறு
இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் கேல் மேயர்ஸ் விராட் கோலி உடன் பேசிக் கொண்டிருந்தபோது கம்பீர் அவரை பிரச்சனை பெருசாக கூடாது என்று அழைத்துச் சென்றார். அப்போது, கோலியும், கம்பிரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வீரர்கள், இருவரையும் சூழ்ந்து கொண்டு மோதலை தடுக்க முயற்சி செய்தனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கை மீறி சென்று விடும் என்பதற்காக அமித் மிஸ்ராவும் உள்ளிட்டோர் விராட் கோலியை தள்ளி செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. முன்னாள் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி மற்றும் எல்எஸ்ஜி ஆலோசகர் கவுதம் கம்பீர் ஆகியோரின் மோதல் சின்னபிள்ளைத்தனமாக காணப்பட்டது. விராட், கம்பீர் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோரின் தகராறால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.