சதம் அடித்தும் சறுக்கிய விராட் -17 வருட IPL தொடரின் மோசமான சாதனை

Virat Kohli Royal Challengers Bangalore IPL 2024
By Karthick Apr 07, 2024 04:39 AM GMT
Report

சதம் அடித்தும் 17 வருட ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையை படைத்துள்ளார் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி.

RCB vs RR

நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 183 ரன்களை குவித்தது.அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் விராட் கோலி 72 பந்துகளில் 113 ரன்களை விளாசினார்.

virat-makes-a-bad-record-in-17-year-ipl-history

இது அவருக்கு ஐபிஎல் தொடரில் 8-வது சதமாகும். பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ரன் இன்றி வெளியேறினாலும், பின்னர் வந்த பட்லர் - சாம்சன் இணை சிறப்பாக செயல்பட்டது.

புனித் ராஜ்குமார் மனைவி தான் RCB தோல்விக்கு காரணமா..? கமிஷனருக்கு வந்த புகார்

புனித் ராஜ்குமார் மனைவி தான் RCB தோல்விக்கு காரணமா..? கமிஷனருக்கு வந்த புகார்

42 பந்துகளில் 69 ரன்களை எடுத்து சாம்சன் வெளியேறிய நிலையில், அபாரமாக விளையாடிய பட்லர் 58 பந்துகளில் 9 ஃபோர், 4 சிக்சருடன் 100 ரன்களை எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதனால் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

மோசமான சாதனை

இந்த போட்டியில் பெங்களூரு வீரர் விராட் சதம் விளாசியதற்கு அவரைபலரும் பாராட்டி வரும் சூழலில், அவர் மோசமான சாதனை ஒன்றையும் நேற்று நிகழ்த்தியுள்ளார்.

virat-makes-a-bad-record-in-17-year-ipl-history

அரைசதம் அடிப்பதற்கு விராட் 39 பந்துகளையும், 51 ரன்கள் முதல் 100 ரன்கள் வரை எடுப்பதற்கு 28 பந்துகளையும் எடுத்து கொண்டார். 67 பந்துகளில் அரைசதம் விளாசியதன் மூலமாக விராட் கோலி, 17 வருட ஐபிஎல் வரலாற்றில் அதிக பந்துகளை எடுத்து சதம் விளாசிய வீரர் என்ற மோசமான சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

virat-makes-a-bad-record-in-17-year-ipl-history

இதற்கு முன்னதாக பெங்களூரு அணிக்கு விளையாடிய மணீஷ் பாண்டே 2009ஆம் ஆண்டில் டெக்கான் சார்ஜர்ஸ் எதிராக 67 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. இதனை நேற்று விராட் கோலி சமன் செய்துள்ளார்.