ODI உலகக் கோப்பையிலும் கோலி விளையாட மாட்டார் - ஏன் தெரியுமா?
விராட் கோலி 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வரை விளையாடுவாரா என கேள்வி எழுந்துள்ளது.
விராட் கோலி
விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் ஓய்வு அறிவிக்கவில்லை.
இதனால் 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வரை விளையாடுவார் என்று எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வரை இந்திய அணி மொத்தம் 24 ஒருநாள் போட்டிகளில் தான் விளையாடும்.
ODI உலகக் கோப்பை?
இதில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஒருநாள் தொடர்கள் சேர்க்கப்படும் வாய்ப்புள்ளது. அதன்படி, 30 போட்டிகளில் தான் இந்திய அணி விளையாடும். இது சுமார் இரண்டரை ஆண்டு கால கட்டத்தில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகளின் எண்ணிக்கை.
எனவே விராட் கோலி தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும். ஆனால், ஒரு ஆண்டுக்கு சுமார் 10 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடிவிட்டு, ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் விராட் கோலி விளையாட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.