விராட் கோலிக்கு நடந்தது கொஞ்சம் கூட நியாயமில்லை- கொந்தளித்த ஏபி டி வில்லியர்ஸ்!

Virat Kohli Royal Challengers Bangalore IPL 2024
By Swetha Apr 22, 2024 02:24 PM GMT
Report

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார்.

கோலிக்கு  நடந்தது நியாயமில்லை

இந்த ஆண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று பெங்களூரு அணி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 222 ரன்களை குவித்தது.

விராட் கோலிக்கு நடந்தது கொஞ்சம் கூட நியாயமில்லை- கொந்தளித்த ஏபி டி வில்லியர்ஸ்! | Virat Kohlis Wicket Is Not Fair Ab De Villiers

இதனை சேஸ் செய்த பெங்களூரு 221 ரன்கள் அடித்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் பெங்களூரு அணியின் துவக்க வீரரான விராட் கோலி 7 பந்துகளில் 18 ரன்கள் என சிறப்பாக விளையாடி வந்தார், அப்போது ஹர்சித் ராணா புல்டாசாக வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அந்த பந்து இடுப்புக்கு மேலே செல்வதுபோல் தெரிந்தது. இதனால் அவர் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். ரிவியூவில் அவர் கீரிசுக்கு வெளியே நிற்பது தெரிந்தது. மேலும் ரிவியூவில் பந்தை அவர் அடிக்காமல் விட்டால் ஸ்டம்ப் லைனில் சரியாக செல்வதுபோல் தெரிந்தது.

அந்த IPL அணி, என்னை நம்பவைத்து ஏமாற்றியது - ஏபி டி வில்லியர்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

அந்த IPL அணி, என்னை நம்பவைத்து ஏமாற்றியது - ஏபி டி வில்லியர்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

கொந்தளித்த ஏபி டி வில்லியர்ஸ்

இதனால் கள நடுவர் தீர்ப்பின் படி விராட் கோலிக்கு அவுட் வழங்கப்பட்டது.இதனால் அதிருப்தி அடைந்த விராட் கோலி கள நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது கருத்தினை ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது, இது நடுவரின் தவறு கிடையாது.

விராட் கோலிக்கு நடந்தது கொஞ்சம் கூட நியாயமில்லை- கொந்தளித்த ஏபி டி வில்லியர்ஸ்! | Virat Kohlis Wicket Is Not Fair Ab De Villiers

ஆனாலும் இந்த விக்கெட் கொடுக்கப்பட்ட விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் தொழில்நுட்பத்தை காலத்திற்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்ள வேண்டும். புட்பாலில் கோடுகள் வரைந்து பயன்படுத்துவதுபோல விராட் கோலி நின்றிருக்கும் இடத்தில் பந்தை அவர் எவ்வாறு சந்தித்தாரோ அதை வைத்து அளவிட வேண்டும்.

பந்து கிரீஸிற்கு செல்லும்போது எவ்வளவு உயரத்தில் இருந்திருக்கும் என்றெல்லாம் பார்த்திருக்கக் கூடாது. என்னை பொறுத்தவரை இந்த விக்கெட் நியாயம் அல்ல என்று ஏ.பி.டி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.