அனுஷ்கா சர்மாவுடன் வீடியோ கால் - சதத்திற்கு பின் விராட் கோலியின் முதல் செயல்!
வெற்றிக்கு பின் விராட் கோலி, மனைவி அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ காலில் பேசிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
கோலியின் சதம்
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 186 ரன்கள் சேர்த்து அபார வெற்றியை பதிவு செய்தது. விராட் கோலியின் சதம் காரணமாக பெங்களூரு அணி வெற்றியை பெற்றது.
இந்தப் போட்டிக்கு பின் விராட் கோலி ஐதராபாத் அணியின் இளம் வீரர்களுடன் சிறிது நேரம் செலவிட்டார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டு சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
வீடியோ கால்
இதற்கிடையில், மிகமுக்கியமான சதத்தை விளாசிய பின் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ காலில் பேசிய புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு முறையும் தனது வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் மனைவியே முக்கியக் காரணம் என அடிக்கடி கோலி கூறுவது குறிப்பிடத்தக்கது.