சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி

Virat Kohli
By Irumporai Jan 16, 2023 03:51 AM GMT
Report

இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்தியா இலங்கை அணி போட்டி

அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 390 ரன்கள் குவித்தது. விராட் கோலி 166 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷுப்மன் கில் 116 ரன் எடுத்தார்.

ரோகித் சர்மா 42 ரன், ஸ்ரேயாஸ் அய்யர் 38 ரன்னில் அவுட்டாகினர். இதையடுத்து 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிய இலங்கை 73 ரன்னில் சுருண்டது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி | Virat Kohli Crosses Sachins Record

விராட் கோலி சாதனை

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார். சொந்த மண்ணில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதம் விளாசி அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.

இதற்கு முன்பு சச்சின் 20 சதம் அடித்திருந்தார். சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 46-வது சதத்தை 452- வது இனனிங்சில் தான் அடித்தார். ஆனால் விராட் கோலி 259-வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 5வது இடத்தை பிடித்தார்.