உலக சாதனை படைத்த விராட் கோலி - ரசிகர்கள் கொண்டாட்டம்
டி20 கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.
விராட் கோலி
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக விராட் கோலி 70 ரன்களும், படிக்கல் 50 ரன்களும் அடித்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். தொடர்ந்து ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 194 ரன்களே எடுத்தது.
உலக சாதனை
இதனால் ஆர்சிபி 11 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதை பெற்றார். இதன்மூலம் டி20 போட்டிகளில் முதல் இன்னிங்சில் விராட் கோலி 50+ ரன்கள் அடிப்பது 62-வது முறை.
முதல் இன்னிங்சில் அதிக முறை 50+ ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை கோலி படைத்துள்ளார். முன்னதாக பாபர் அசாம் 61 முறை 50+ ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.