விராட் கோலிக்கு பிடித்தது இந்த சிம்பு பாடல்தானாம் - சுவாரஸ்ய தகவல்
தனக்கு பிடித்த தமிழ் பாடல் குறித்து விராட் கோலி தகவல் பகிர்ந்துள்ளார்.
விராட் கோலி
தொடரில் ஆர்சிபி அணி 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
இதனால் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முதல் அணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் 10 இன்னிங்ஸில் ஆடியுள்ள விராட் கோலி, 6 அரைசதங்கள் உட்பட 446 ரன்களை விளாசியுள்ளார்.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் சமூக வலைதள பக்கத்தில் விராட் கோலியின் பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், விராட் கோலியிடம், தற்போது உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது என்று கேட்கப்பட்டது.
பிடித்த தமிழ் பாடல்
அதற்கு விராட் கோலி, இந்த பதில் உங்களுக்கு கொஞ்சம் சர்ப்ரைஸாக இருக்கலாம். எனக்கு தற்போது மிகவும் பிடித்த பாடல், "நீ சிங்கம் தான்" என்று பதிலளித்துள்ளார்.
கடந்த 2 சீசன்களாக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் என்ட்ரி-க்கு அடிக்கடி பயன்படுத்தப்பட்ட பாடல், நீ சிங்கம் தான். மேலும், நாளை சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்லை... ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்து பேசிய கயாடு லோஹர்! Manithan

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
