குல்தீப் யாதவுக்கு தடை? ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த விவகாரம் - வீடியோ வைரல்
குல்தீப் யாதவ் ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
களத்தில் பரபரப்பு
ஐபிஎல் தொடரில், 48வது போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின.
இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்து டெல்லி அணி தோல்வியடைந்தது. தொடர்ந்து கொல்கத்தா அணி 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
வீடியோ வைரல்
இதற்கிடையில், ரிங்கு சிங் மற்றும் குல்தீப் யாதவ் சக வீரர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென குல்தீப் யாதவ் அருகில் இருந்து ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்தார்.
Kuldeep yadav slaps rinku singh#kuldeepyadav #rinkusingh#KKRvsDC #ipl20225 @imkuldeep18 pic.twitter.com/SEWAgGagwq
— Bobby (@Bobby04432594) April 29, 2025
குல்தீப் யாதவ் விளையாட்டாக கன்னத்தில் அறைந்தது போல் இருந்தாலும் அதனை சற்றும் எதிர்பார்க்காத ரிங்கு சிங் சில நொடிகளில் கோபமடையும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.
தற்போது இந்த செயலுக்கு கடும் எதிர்வினை கிளம்பியுள்ளது. பிசிசிஐ குல்தீப் யாதவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இது குறித்து குல்தீப் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.