கேஎல் ராகுலுக்கு திருப்பிக்கொடுத்த கோலி; இது என் மைதானம் - வைரலாகும் வீடியோ

Virat Kohli Viral Video KL Rahul IPL 2025
By Sumathi Apr 28, 2025 07:27 AM GMT
Report

கே.எல். ராகுல் பெங்களூருவில் செய்த செயலுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார்.

DCvRCB 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

virat kohli - kl rahul

அதில் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடினார். அந்த வெற்றிக்குப் பின் தனது சொந்த ஊரான பெங்களூருவில் தான் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டும் வகையில், 'இது என்னுடைய மைதானம், என்னுடைய வீடு' என பேட்டை வைத்து சைகை செய்தார். அது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இனி பாகிஸ்தான் உடன் கிரிக்கெட் போட்டி கிடையாது - பிசிசிஐ அதிரடி முடிவு

இனி பாகிஸ்தான் உடன் கிரிக்கெட் போட்டி கிடையாது - பிசிசிஐ அதிரடி முடிவு

கோலி பதிலடி

இந்நிலையில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டெல்லியில் வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்குப் பிறகு கே.எல். ராகுல் செய்தபடியே, விராட் கோலியும் அவர் முன் சென்று 'இது எனது மைதானம்' என சைகை செய்துக் காட்டினார். பின் கோலி சிரித்துக்கொண்டே ராகுலை அணைத்துக்கொண்டார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.