கோஹ்லி டக் அவுட் ஆகி வெளியேற்றிய பென் ஸ்டோக்ஸ்: வைரலாகும் வீடியோ காட்சிகள்
இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் கோஹ்லி டக் அவுட் ஆகி வெளியேறும் வீடியோ காட்சியை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, 205 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
அதன் பின் ஆடி வரும் இந்திய அணி சற்று முன் வரை 4 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. இதில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, 7 பந்துகள் சந்தித்த நிலையில் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
#INDvENG #INDvsENG #INDvsEND#INDvsEND #ENGvIND#ViratKohli
— rekha (@itsmawish) March 5, 2021
Virat kohli had a fight with Ben stokes
Yesterday.
Today Ben stokes bowled him out
On a duck
Everyone's reaction to virat kohli
?♂️ pic.twitter.com/c1QnZQijMk
நேற்று கோஹ்லிக்கும், பென் ஸ்டோக்ஸ்க்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் அதை மனதில் வைத்து கோஹ்லி இன்று நிச்சயம் ஸ்டோக்ஸ் பந்தை வெளுத்து வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, ஸ்டோக்ஸ் தன்னுடைய அற்புதமான பவுன்சர் மூலம் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்தினார்.
இதைக் கண்ட இணையவாசிகள் சிலர் இந்த அசிங்கம் தேவையா என்பது போல், டுவிட்டரில் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.