தோனி மட்டும்தான் பேசினார் - மனம் உடைந்த விராட் கோலி!

MS Dhoni Virat Kohli Cricket Asia Cup 2022
By Sumathi Sep 05, 2022 05:27 AM GMT
Report

இந்தியா, பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு பிறகு தோனி குறித்து விராட் கோலி மன திறந்துள்ளார்.

சூப்பர் 4 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணியில் விராட் கோலி 60 ரன்கள் குவித்து 2வது அரைசதத்தை பதிவு செய்தார்.

தோனி மட்டும்தான் பேசினார் - மனம் உடைந்த  விராட் கோலி! | Virat Kohli Opens Up About Dhoni

இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்தியா தோல்வி

அப்போது, “நான் கடந்த 14 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். என்னுடைய வேலை ஒன்றே ஒன்று தான். அது சிறப்பாக விளையாடி அணிக்கு என்னுடைய பங்களிப்பை அளிப்பது. எனக்கு கிடைத்த ஓய்வு அதை நன்றாக புரிய வைத்துள்ளது.

தோனி மட்டும்தான் பேசினார் - மனம் உடைந்த  விராட் கோலி! | Virat Kohli Opens Up About Dhoni

மீண்டும் பழைய மாதிரி என்னுடைய கிரிக்கெட்டை நான் ரசிக்க தொடங்கிவிட்டேன். என்னுடைய வாழ்க்கையில் ஒரு மாதம் பேட்டை தொடாமல் இருப்பேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. எனினும் அந்த ஓய்வு எனக்கு தேவைப்பட்டது.

  கோலி உருக்கம்

நீங்கள் எதற்காக கிரிக்கெட் விளையாட தொடங்கினீர்களோ அதை ஒரு சில நேரங்களில் மறக்க கூடும். அதை மீண்டும் ஞாபக படுத்தி கொள்வது முக்கியமான ஒன்று. அதை நிச்சயம் செய்ய வேண்டும். நான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த போது எனக்கு தோனி மட்டுமே மெசேஜ் அனுப்பினார்.

மற்றவர்கள் இடம் என்னுடைய நம்பர் இருந்தது. ஆனால் அவரை தவிர வேறு யாரும் எனக்கு மெசேஜ் அனுப்பவில்லை. என்னுடைய வாழ்க்கையை நான் நேர்மையாக வாழ்ந்து வருகிறேன். இது போன்ற விஷயங்கள் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று ” எனத் தெரிவித்துள்ளார்.

சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் மோதும்.