விராட் கோலி படைத்த புதிய சாதனை... இது கிரிக்கெட்டில் அல்ல
இந்திய அணியின் அணித்தலைவரான விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோயர்ஸ் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் 10 கோடி பாலோயர்ஸ்களை கடந்த உலகப்பிரபலங்கள் வரிசையில் கோலி இணைந்துள்ளார். இவருக்கு ஃபேஸ்புக்கில் 3.60 கோடி பாலோயர்ஸ்களும், ட்விட்டரில் 40.80 கோடி பேரும் இருக்கின்றனர்.
தற்போது இன்ஸ்டாகிராமில் 10 கோடி பாலோயர்ஸ்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இதனையொட்டி ஐசிசி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பாராட்டுச் செய்தியில், "இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் 32 வயதான இளம் வீரர் விராட் கோலி" எனத் தெரிவித்துள்ளது
இன்ஸ்டாகிராமில் 26.6 கோடிக்கும் அதிகமான பாலோயர்ஸ்களை கொண்ட விளையாட்டு வீரராக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.