விராட் கோலியின் நியூ ஹேர் ஸ்டைல் - பிரபல ஹேர் ட்ரெஸ்ஸர் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா?

Virat Kohli Royal Challengers Bangalore IPL 2024
By Sumathi Apr 09, 2024 07:45 AM GMT
Report

விராட் கோலியின் நியூ ஸ்டைல் ஹேர் கட் கவனம் பெற்றுள்ளது.

விராட் கோலி

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, மிகவும் ஸ்டைலான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இவரது உடை, ஸ்டைல், சிகை அலங்காரம், டாட்டூ போன்றவை அவ்வப்போது கவனம் பெறுவது வழக்கம்.

virat kholi hair style

அந்த வகையில் IPL 2024ல் கோலியின் அட்டகாசமான நியூ லுக் ஹேர் ஸ்டைல் பேசு பொருளாகியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பிரபல சிகையலங்கார நிபுணர் ஹக்கீம், “நான் ஹேர் கட்டுக்கு எவ்வளவு ரூபாய் வரை வசூலிக்கிறேன் என்பதை அனைவரும் அறிவார்கள்.

ஹேர் கட் செய்வதற்கு நான் வசூலிக்கும் குறைந்தபட்ச தொகை 1 லட்சம். விராட் கோலியின் ஹேர் கட்டுக்கு எவ்வளவு வசூலித்தார் என்று வெளிப்படையாக கூறவில்லை. மஹி சார் மற்றும் விராட் இருவரும் என்னுடைய பழைய நண்பர்கள், பல வருடங்களாக என்னிடம் தான் ஹேர் கட் செய்து வருகிறர்கள்.

அதிகாலை 3 மணி வரை குடிச்சோம்; மன்னிப்பு கேட்ட விராட் கோலி - சீக்ரெட் உடைத்த டீன் எல்கர்

அதிகாலை 3 மணி வரை குடிச்சோம்; மன்னிப்பு கேட்ட விராட் கோலி - சீக்ரெட் உடைத்த டீன் எல்கர்

வைரல் ஹேர் கட்

இப்போது ஐபிஎல் தொடங்கியுள்ளதால், வித்தியாசமான, கூலான லுக்கில் புதுவித ஹேர் கட் செய்ய முடிவு செய்தோம். விராட்டின் புருவத்தின் ஒரு லேசான கட் ஒன்றை வைத்து, சைடுகளை பேட் (Fade )செய்தோம். அவரது தலைமுடிக்கு ஹேர் கலர் செய்து பின்பக்கத்தில் முள்ளெட் டெக்ஸ்சர் ஒன்றை கொடுத்துள்ளோம்.

விராட் கோலியின் நியூ ஹேர் ஸ்டைல் - பிரபல ஹேர் ட்ரெஸ்ஸர் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா? | Virat Kohli New Hair Cut Cost Goes Viral

பேஷன் ஸ்டைலிங் என்று வந்துவிட்டால் அதில் ஐக்கானாக திகழ்பவர் விராட் கோலி. அவர் ஒரு மிக சிறந்த மனிதர் மட்டுமல்ல அவர் ஒரு மிக சிறந்த விளையாட்டு வீரரும் கூட. ஸ்டைல், பேஷன் என்று வந்துவிட்டால் விராட் அதில் நம்பர் ஒன் எனத் தெரிவித்துள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் இவர்தான் ஹேர் கட் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.