விராட் கோலி ஒருமுற கூட அங்க போனதில்ல; அவர பார்த்து கத்துக்கோங்க - ரோஹித் ஷர்மா!
நட்சத்திர வீரர் விராட் கோலி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியுள்ளார்.
விராட் கோலி
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களால் விளையாடவில்லை. இந்திய அணிக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் அணியின் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி குறித்து பற்றி ஜியோ சினிமா சேனலில் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியதாவது "தன்னுடைய மொத்த கேரியரிலும் விராட் கோலி எப்போதுமே என்சிஏவில் (இந்திய வீரர்கள் காயமடைந்தால் சிகிச்சைக்கு செல்லக்கூடிய தேசிய கிரிக்கெட் அகாடமி) இருந்ததில்லை.
ரோஹித் புகழாரம்
எனவே அவரிடம் இருக்கும் ஆர்வத்தை அனைத்து இளம் வீரர்களும் பார்க்க வேண்டும் என்று நான் சொல்வேன். நான் போதுமான அளவுக்கு விராட் கோலியை பார்த்துள்ளேன்.
அவர் இதுவரை சாதித்துள்ளவற்றில் எளிதாக திருப்தியடைந்து விடலாம். அதனால் 2 – 3 தொடர்கள் கழித்து விளையாட வருகிறேன் என்று அவரால் எளிதாக சொல்ல முடியும்.
ஆனால் அவர் அனைத்து தொடரிலும் அணிக்காக இருப்பார். அது போன்ற பசியை ஒருவருக்கு யாரும் சொல்லித் தர முடியாது. நீங்கள் அதை மற்றவர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.