மாசமாசம் இவ்வளவு கோடியா? ஆசியாவிலேயே நம்பர் 1 கோலி தான் - வாய்ப்பிளக்க வைக்கும் தகவல்!

Sumathi
in கிரிக்கெட்Report this article
அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கோலி 3வது இடத்தில் உள்ளார்.
விராட் கோலி
சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் விராட் கோலி. எந்த சாதனை முறியடிக்கப்பட்டாலும் விராட் கோலி தான். அந்த அளவிற்கு ஹாட் டாப்பிக்கில் உள்ளவர்.
தொடர்ந்து, இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 256 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்கின்றனர்.
அதிக வருமானம்
இவர் பதிவிடும் ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.11.25 கோடி வருமானம் ஈட்டி வருகிறார். தற்போது 2023ஆம் ஆண்டின் 8 மாதத்திலேயே இன்ஸ்டாகிராமின் ஒரு பதிவிற்கான வருமானம் ரூ.8 கோடி வரை உயர்ந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் ஆண்கள் பட்டியலில் விராட் கோலி 5வது இடத்தில் இருக்கிறார். மேலும், இந்தியாவில் விராட் கோலிக்கு பின் அதிக வருமானம் ஈட்டும் நபராக நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளார்.
விளையாட்டு வீரர்கள் என்று எடுத்துக் கொண்டால் விராட் கோலிக்கு மேல் நட்சத்திர கால்பந்து வீரர்களான லயோனல் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரும் இருக்கின்றனர்.