இதுவரை யாருமே செய்ததில்லை; விளாசிய விராட் கோலி - தனித்துவ உலக சாதனை!
கோலி வேறு யாரும் படைக்காத தனித்துவ உலக சாதனை படைத்துள்ளார்.
விராட் கோலி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விராட் கோலி 87 ரன்களுடனும், ஜடேஜா 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதன் மூலம், விராட் கோலி 500 சர்வதேச போட்டிகளில் விளையாடிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், 500வது போட்டியில் களமிறங்கிய வீரர்களில் இதுவரை ஒருவர் கூட அரைசதம் கூட அடித்ததில்லை.
உலக சாதனை
அதன்படி, 500வது போட்டியில் அரைசதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் 6வது இடத்தில் இருந்த விராட் கோலி,
50 on 500th ?
— FanCode (@FanCode) July 20, 2023
.
.#ViratKohli? #INDvWIonFanCode #WIvIND pic.twitter.com/0EuVH3Ctsb
ஐந்தாவது இடத்தில் இருந்த காலிஸ் சாதனை முறியடித்துள்ளார்.
தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் விராட் கோலி நிச்சயம் 76வது சதத்தை விளாசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.