கோலியை சதமடிக்க விட்டிருக்க கூடாது; சிக்கலில் ஆஸி அணி - கிளார்க் வார்னிங்!
கோலியை சதம் அடிக்கவிட்டது சிக்கலை உருவாக்கியுள்ளதாக கிளார்க் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி
விராட் கோலி பெர்த் மைதானத்தில் தனது சதத்தை விளாசி ஃபார்முக்கு திரும்பியுள்ளார். ஃபீல்டிங்கின் போது பும்ராவுக்கு உதவியாக கேப்டன்சியையும் மேற்கொண்டார். கோலியின் கம்பேக்கை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கில் கிளார்க் பேசுகையில், அண்மை காலங்களில் பெரிய ஸ்கோரை அடிக்காததால், அவர் மீது அழுத்தம் இருந்தது. ஆனால் இப்போது சதம் விளாசியதன் மூலம் மீண்டும் மன உறுதியை உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்.
கிளார்க் கருத்து
அந்த சதத்தை விளாசிய பின், அனைவரும் அமர்ந்து விராட் கோலி இஸ் பேக் என்று சொன்னார்கள். இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஆஸ்திரேலியா அணியை எச்சரித்திருந்தேன். முதல் போட்டியில் இந்திய அணியை வெற்றிபெறவிட்டால், சிக்கல் அதிகமாக இருக்கும் என்றேன்.
அவர்களை முதலிலேயே அடித்துவிட்டால், அடுத்தடுத்த போட்டிகளில் ஈடுபட்ட முயற்சிப்பார்கள். 3 அல்லது 4வது டெஸ்டில் இந்திய வீரர்கள் சதமடித்திருந்தால் பிரச்சனையில்லை.
விராட் கோலியை முதல் போட்டியில் சதமடிக்க விட்டது, மிகப்பெரிய பிரச்சனைகளை உருவாக்கும். ஏனென்றால் அவர் நீண்ட காலமாக சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தவர் என்று தெரிவித்துள்ளார்.