இப்போ சட்டைய கழட்டு - எதிர் அணி வீரரின் செயலால் கடுப்பான விராட்!

Virat Kohli Viral Video
By Sumathi Dec 25, 2022 04:47 AM GMT
Report

வங்கதேச வீரரின் செயலால், விராட் கோலி கடுப்பாகி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

ind-vs-ban

இந்திய வங்கதேசம் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 227 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள் எடுத்து, 87 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இப்போ சட்டைய கழட்டு - எதிர் அணி வீரரின் செயலால் கடுப்பான விராட்! | Virat Kohli Irritated After Shanto Wasting Time

இதற்கிடையில், வங்கதேச அணி பேட்டிங்கின்போது, நேரத்தை வீணடிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது. அதிலும், இன்று காலை சற்று வெளிச்சம் குறைவாக இருந்ததால் நேரத்தை கடத்த வங்கதேச வீரர் ஷாண்டா பலமுறை முயன்றதாக தெரிகிறது. பெவிலியனில் இருந்து அனாவசியமாக பேட்டை எடுத்து வரச்சொல்வது,

கடுப்பில் விராட்

ஷூ லேசை கழட்டி மீண்டும் போடுவது என பல செயல்களை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால், இந்திய கேப்டன் கள நடுவர்களிடம் முறையிட்டுள்ளார். தொடர்ந்து, அஸ்வின், விராட் கோலி ஆகியோரும் இதனை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், ஷாண்டோ ஷூ லேசை கழட்டி மாட்டிவந்த நிலையில், ஸ்லிப்பில் நின்ற விராட் கோலி, பந்துவீச்சாளர் முனையில் இருந்த ஷாண்டேவை பார்த்து, 'இம்... இப்போது நீங்கள் சட்டையை கழட்டுங்கள்' என கூறிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.