இப்ப வந்து மோதுடா கிட்ட வந்து பாருடா : 3 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தல்
வங்கதேசத்திற்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி இரட்டை சதமடித்தார். தவான் 3 ரன்னில் ஆட்டம் இழக்க அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் இரட்டை சதமடித்தார்.
விராட் கோலி
அவருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி சதமடித்து விளாசியுள்ளார். விராட் கோலி ஒரு நாள் போட்டியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சதமடித்து தனது 44 வது சத்த்தை பூர்த்தி செய்துள்ளார். 2019 ல் மேற்கந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கிட்டதிட்ட 1214 நாட்களுக்கு பிறகு சதமடித்து விளாசியுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு பிறகு சதம்
இதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி தனது 44வது சதத்தை பதிவு செய்தார். இதனை விராட் கோலி 85 பந்துகளில் பூர்த்தி செய்தார் என்பது குறிப்பிடதக்கது .
இதில் 11 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். கோலி 91 பந்துகளை எதிர்கொண்டு 113 ரன்களில் ஆட்டமிழந்தார்.