இதுதான் கடைசி.. ஓய்வு பெறும் அஸ்வின்? போட்டிக்கு நடுவில் விராட் கோலி கொட்டுத்த ஹிண்ட்!
இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறப்போவதாக யூகங்கள் எழுந்துள்ளது.
அஸ்வின்
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுமா என்கிற எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது அந்த போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 445 ரன்களைக் குவித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி ஆரம்பத்தி இருந்தே திணறியது. கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் அரை சதங்களால் பாலோஆனை இந்திய அணி தவிர்த்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தமே 18 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்களை இழந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, ஆகாஷ்தீப், சிராஜ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தினர்.
விராட் கோலி
89 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 274 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால், இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி 8 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட ஆட்டம் தடைபட்டது. இதனிடையே மழையை வெறித்து பார்த்தபடி இந்திய வீரர்கள் விராட் கோலியும் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்ரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருக்கும் காட்சிகள் திரையில் காட்டப்பட்டது.
அப்போது, அஸ்வினை பாராட்டி விராட் கோலி கட்டியணைத்தார். இரண்டு முறை அஸ்வினை விராட் கோலி கட்டியணைத்து ஆரத்தழுவி பாராட்டினார்.இதனை பார்த்த ரசிகர்கள் அஸ்வின் ஓய்வு பெறப்போகிறார் என்றும்,
அதனை தான் விராட் கோலியிடம் பேசியிருப்பார் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அது உண்மை என்று அஸ்வின் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.