அன்புள்ள கோலிக்கு.. கிரிகெட்டில் இருந்து ஓய்வு பெருங்கள் ப்ளீஸ் - ரசிகர் கண்ணீர் மல்க கடிதம்!
விராட் கோலியின் ரசிகர் ஒருவர் எழுதிய கடிதம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அன்புள்ள கோலிக்கு..
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த மொத்த தொடரில் வெறும் ஒரு முறை மட்டுமே சதம் அடித்த நிலையில், மற்ற இன்னிங்ஸ்களில் தொடர்ந்து ஆட்டமிழந்தார். இந்த ஆண்டு அவரது பேட்டிங் சராசரி 25 என்பதாகவே உள்ளது.
அவர் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் மட்டுமே அடித்து இருக்கிறார். தொடர்ந்து மோசமான ஃபார்மில் இருந்து வருகிறார். ஒவ்வொரு முறையும் இவர் ஆட்டமிழக்கும் விதம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்துகிறது எனலாம்.
அவரது பலவீனத்தை எதிரணிகள் மிக எளிதாக பயன்படுத்தி வருகின்றன. ஒரு அனுபவ வீரர், டெஸ்ட் உலகின் மன்னனாக இருந்த ஒருவர் இவ்வாறு ஆட்டம் இழப்பது கடினமாக உள்ளது. இது தொடர்பாக ரோகன் குலாவனி என்ற அவரது ரசிகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "அன்புள்ள விராட் கோலி, நான் உங்களை ரோஹித்துடனோ அல்லது மற்ற வீரர்களுடனோ சேர்த்து பேசவில்லை. நீங்கள் உங்களுடன் மட்டுமே போட்டி போடுபவர். அந்த அளவுக்கு உங்களது செயல்பாடு உச்சத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உங்களின் ரசிகராக நான் மிகவும் கடினமாக உணர்கிறேன்."
ரசிகர் கடிதம்
"நீங்கள் குறைவான ஸ்கோர் அடிப்பதால் நான் அப்படி உணரவில்லை. மாறாக நீங்கள் ஆட்டம் இழக்கும் விதம்தான் என்னை கடினமாக உணரச் செய்கிறது. நீங்கள் இதுவரை உருவாக்கி வைத்திருக்கும் புகழை மேலும் சேதப்படுத்தாமல் காப்பாற்றுவதை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
எனக்கு புள்ளி விவரங்களில் பெரிதாக ஆர்வமில்லை. ஆனால், உங்களுடைய டெஸ்ட் சராசரி 47க்கும் கீழே செல்வதை என்னால் பார்க்க முடியவில்லை." என்று விரக்தியாக கூறியுள்ளார். மேலும், உங்கள் பேட்டிங் சராசரி ஏற்கனவே மோசமானதாக மாறிவிட்டது.
நீங்கள் நிச்சயமாக மேலும் அதிக காலம் விளையாட மாட்டீர்கள் என நம்புகிறேன். குறைந்தபட்சம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டுமாவது ஓய்வு பெறுவதை நீங்கள் ஆலோசிக்க வேண்டும். இப்படிக்கு உங்களின் ஏமாற்றமடைந்த ரசிகர்." என்று தெரிவித்துள்ளார்.