நாங்க Cup அடிச்சதில்ல..ஆனால் அவ்வளவு ரசிகர்கள் - RCB மகளிர் அணிக்கு கோலி அட்வைஸ்!

Virat Kohli Royal Challengers Bangalore IPL 2023
By Sumathi Mar 17, 2023 08:17 AM GMT
Report

தொடர் தோல்வியில் உள்ள RCB மகளிர் அணிக்கு விராட் கோலி அட்வைஸ் அளித்துள்ளார்.

RCB மகளிர் அணி

இந்தியாவில் முதன் முறையாக மகளிர் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு துவங்கியுள்ளது. இதில் குஜராத் ஜெய்ன்ட்ஸ், UP வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளது.

நாங்க Cup அடிச்சதில்ல..ஆனால் அவ்வளவு ரசிகர்கள் - RCB மகளிர் அணிக்கு கோலி அட்வைஸ்! | Virat Kohli Gives A Pep Talk To Rcb Women Team

இதைத்தொடர்ந்து RCBல் மகளிர் அணியில் ஸ்ம்ரிதி மந்தனா, ரிச்சா கோஷ், சோபி டிவைன், எலீஸ் பெர்ரி, ஹீதர் நைட் ஆகிய முக்கிய வீராங்கனை இருக்கிறார்கள். 6 போட்டிகள் முடிவடைந்த நிலையில் மும்பை முதல் இடத்திலும்,டெல்லி இரண்டாவது இடத்திலும், ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்த RCB அணி 4 ஆம் இடத்திலும் இருக்கிறது.

கோலி அட்வைஸ்

இதனால் RCB ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் RCB ஆடவர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மகளிர் அணிக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். "நான் 15 வருடங்களாக ஐபிஎல் விளையாடி வருகிறேன். நான் இன்னும் கோப்பையை வெல்லவில்லை.

ஆனால் அது ஒவ்வொரு வருடமும் உற்சாகமாக இருப்பதில் இருந்து என்னைத் தடுக்காது. அவ்வளவுதான் நான் செய்யவேண்டியது . நான் விளையாடும் ஒவ்வொரு தொடரிலும், ஒவ்வொரு போட்டியிலும் என்னால் செய்யக்கூடிய முயற்சி இதுதான். நமது நிலைமை மோசமாக இருந்தாலும் உங்கள் வாய்ப்பை பற்றி யோசியுங்கள்.

வைரல் வீடியோ

அதற்கு எப்பொழுதும் ஒரு மறுபக்கம் இருக்கிறது. நாங்கள் இதுவரை ஐபிஎல்லை வெல்லவில்லை. ஆனால் உலகில் சிறந்த ரசிகர்கள் எங்களிடம் இருப்பதாக நான் இன்னும் உணர்கிறேன். RCBக்காக நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் எப்போதும் உறுதியுடன் இருப்பது இதனால்தான்.

அணைத்து வருடமும் உங்களுக்கு கோப்பை கிடைப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் நீங்கள் ஒவ்வொரு வருடமும் உங்கள் 110% உழைப்பை கொடுங்கள். அவ்வளவு தான் நீங்கள் செய்ய வேண்டியது எனத் தெரிவித்துள்ளார்.