தோல்வியெல்லாம் சகஜம் - பாக்., கேப்டன் பாபர் அசாமிற்கு கோலி கொடுத்த அன்பு பரிசு!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமிற்கு, விராட் கோலி பரிசளித்துள்ளார்.
ind-vs-pak
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் அணியின் இந்த தோல்விக்கு அவர்களின் பேட்டிங்கே காரணமாக அமைந்துள்ளது. 36 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்ததன் காரணமாகவே பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

கே.எல். ராகுல் திருமணம் - கோடிக்கணக்கில் பரிசு கொடுத்த விராட் கோலி, எம்.எஸ்.தோனி..! வாயடைத்த ரசிகர்கள்...!
அன்பு பரிசு
இந்த ஆட்டம் முடிந்த பிறகு மைதானத்தில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் சந்தித்து கொண்டனர். அப்போது விராட் கோலி தனது ஆட்டோகிராப் போட்ட ஜெர்சியை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு வழங்கினார்.
FANBOY MOMENT FOR BABAR AZAM....!!
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 14, 2023
Babar asks for a signed from Virat Kohli and Virat gives it.pic.twitter.com/Caq3GoQoaV
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக கோலி, தான் பயன்படுத்திய பேட், கையுறை, ஜெர்சி என பல்வேறு பரிசுகளை பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கியுள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி 8வது முறையாக இந்திய அணியிடம் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.