யாரு சாமி நீ; மாபெரும் சாதனை படைக்கப்போகும் விராட் கோலி - சச்சினை ஓரம்கட்ட வாய்ப்பு!
கோலி, சச்சினின் நீண்ட கால சாதனையை தகர்க்க வாய்ப்புள்ளது.
ஒருநாள் தொடர்
மேற்கிந்தியத் தீவுளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. போட்டிகள் நாளை, ஜூலை 29 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் துவங்கி நடைபெறும்.
இதில், விராட் கோலி தற்போதுவரை 274 ஒருநாள் போட்டிகளில் 13776 பந்துகளை எதிர்கொண்டு 12898 ரன்களை குவித்திருக்கிறார். இன்னும் 102 ரன்களை எடுத்தால் 13,000 ரன்களை விளாசிய 5ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துவிடுவார்.
விராட் கோலி சாதனை?
அதுமட்டுமல்ல, குறைந்த இன்னிங்ஸ்களில் 13,000 ரன்களை குவித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துவிடுவார். சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்ஸ்களில் 13,000 ரன்களை கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், சங்கக்காரா, ரிக்கி பாண்டிங் மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் நடப்பாண்டில் ஜெயசூர்யா மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோரின் சாதனைகளை விராட் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan
