ஐபிஎல் தொடரில் 50 அரைசதங்கள் - முதல் இந்திய வீரர் விராட் கோலி தான்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 50 அரைசதங்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
விராட் கோலி
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. மும்பை அணி நிர்ணயித்த 172 ரன்கள் என்ற இலக்கை, ஆர்சிபி அணி 16.2 ஓவர்களில் சேஸ் செய்து அசத்தியது.
விராட் கோலி 38 பந்துகளில் அரைசதம் விளாசியதோடு, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். இந்நிலையில், விராட் கோலி அரைசதம் விளாசியதன் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
சாதனை
இதுவரை 45 அரைசதங்கள் மற்றும் 5 சதங்கள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒருமுறை சின்னசாமி மைதானத்தின் கிங் யார் என்பதை விராட் கோலி நிரூபித்துள்ளார்.
கோலி மைதானத்தில் கால் பதித்த நொடியில் தொடங்கிய ரசிகர்களின் கரகோஷம், அவர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசி முடிக்கும் வரை ஓயவில்லை.