தயவுசெஞ்சு கோலி திரும்ப வாங்க.. மன்றாடும் மதன் லால் - என்ன காரணம்?
கோலி டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று மதன் லால் வலியுறுத்தியுள்ளார்.
கோலி ஓய்வு
இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதனால் டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
இதற்கிடையில், விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு முடிவை அறிவித்திருந்தார். இந்திய அணி அனுபவ வீரர்கள் இன்றி இரண்டு போட்டிகளில் வெற்றிக்கு அருகே சென்று தோல்வி அடைந்துள்ளது.
மதன் லால் கோரிக்கை
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மதன் லால், "இந்திய கிரிக்கெட்டின் மீதான விராட் கோலியின் ஆர்வம் ஒப்பிட முடியாதது. அவர் ஓய்வை கைவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பது எனது விருப்பம்.
அப்படி திரும்புவதில் தவறில்லை. இந்தத் தொடரில் இல்லாவிட்டாலும், அடுத்த தொடரில் அவர் கம்பேக் கொடுக்க வேண்டும். எனது பார்வையில், கோலி தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் எளிதாக இன்னும் 1 அல்லது 2 ஆண்டுகள் விளையாட முடியும்.
அதன் மூலம் அவர் தனது அனுபவத்தை இளைஞர்களுக்குக் கடத்த முடியும். ஆனால், நீங்கள் இப்போதே டெஸ்ட் போட்டியை கைவிட்டு விட்டுவிட்டீர்கள். இப்போது கூட தாமதமாகவில்லை. தயவுசெய்து திரும்பி வாருங்கள்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.