இந்திய அணி பேட்டிங் வரிசையை மாத்தனும்; அவரை வெளியே அனுப்புங்க - ரவி சாஸ்திரி
இந்திய அணி பேட்டிங் வரிசை குறித்து ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி பேட்டிங்
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போது ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது.
நடப்பு தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கருண் நாயர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இதனால் பலரும் அணியில் கருண் நாயர் இடம் குறித்து கேள்விகளை கேட்டு வருகின்றனர். கருண் நாயருக்கு பதில் சாய் சுதர்சனை அணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பண்ட் கையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. எனினும் அந்த காயத்திலிருந்து குணமடைய அவருக்கு நீண்ட நேரம் இருக்கின்றது.
ரவி சாஸ்திரி கருத்து
எனவே அவர் கண்டிப்பாக விளையாடுவார் என்று நினைக்கின்றேன். தற்போது இந்திய அணி நம்பர் மூன்றாவது வீரராக யாரை களம் இறக்குவது என்று நிச்சயம் யோசிக்கும். சாய் சுதர்சனை கொண்டு வரலாமா? இல்லை துருவ் ஜூரலை கொண்டு வரலாமா என்ற யோசனை இந்திய அணிக்கு இருக்கும். துருவ் ஜூரல் ஒரு நல்ல பேட்ஸ்மேன் ஆக சிறப்பாக செயல்படுவார்.
இல்லையென்றால் அதிக நேரம் களத்தில் நின்று விளையாட வேண்டும் என இந்திய அணி முடிவு எடுத்தால் சாய் சுதர்சனை கொண்டுவர அதிக வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால் கருண் நாயருக்கு மேலும் ஒரு வாய்ப்பை கொடுப்போம் என்ற முடிவை கூட இந்திய அணி எடுக்கலாம். இந்த தோல்வியிலிருந்து நிச்சயம் இந்திய அணி மீண்டும் திரும்பி வரும்.
முதல் டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பிறகு இரண்டாவது டெஸ்டில் நாம் கம் பேக் கொடுத்தோம். அதை போல் தற்போது நீண்ட நேரம் இடைவெளி இருக்கின்றது. இதனால் நான்காவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெறும் என நம்புகிறேன். சரியான தருணங்களை நன்றாக பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
இந்திய அணி இறுதியில் சில ரன்களை விட்டுக் கொடுத்தது. பேட்டிங்களும் சொதப்பிவிட்டது. அதை அவர்கள் சரி செய்ய வேண்டும். நான்காவது டெஸ்டில் பும்ரா விளையாடுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக தற்போது இருக்கின்றது. ஏனென்றால் நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் இடையே வெறும் நான்கு நாட்கள் தான் இடைவேளை இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.