12 ஆண்டுகளுக்குப் பிறகு Come Back கொடுக்கும் விராட் கோலி - சூடுபிடிக்கும் ரஞ்சி கோப்பை தொடர்!
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விராட் கோலி ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் களமிறங்க உள்ளார்.
ரஞ்சி கோப்பை
ரஞ்சி கோப்பை தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் வரும் ஜன. 23ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.
இந்த சூழலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மட்டும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் டெல்லி அணியின் உத்தேச வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இடம்பெற்றிருந்தார்.
ஆனால், கழுத்து வலி காரணமாகச் சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக போட்டியிடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜன.30ஆம் தேதி நடைபெறும் டெல்லி - ரயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி
இதன்மூலம் விராட் கோலி 12 ஆண்டுகளுக்குப் பின் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட உள்ளது உறுதியாகி உள்ளது .முன்னதாக ஆஸ்திரேலிய- இந்தியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் மோசமான செயல்பாட்டின் காரணமாக, பிசிசிஐ புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. அதில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து வீரர்களும் கட்டாயம் விளையாட வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.