கிரிக்கெட் வீரர்களுக்கு செக் வைத்த BCCI - புதிய விதிமுறை சொல்வது என்ன?
கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறைகளை பிசிசிஐ விதித்துள்ளது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் .
புதிய விதிமுறை
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து வீரர்களும் கட்டாயம் விளையாட வேண்டும்.
போட்டிகளின் போது அனைத்து வீரர்களும் அணியுடன் ஒன்றாக பயணிக்க வேண்டும். தனியாக பயணம் செய்ய கூடாது.
குறிப்பிட்ட அளவு உடைமைகளையே கொண்டு வர வேண்டும். அதை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் வீரரே அதன் செலவை ஏற்க வேண்டும்.
மேலாளர், சமையல் உதவியாளர் உள்ளிட்ட தனிப்பட்ட நபர்களை வீரர்கள் உடன் அழைத்து வரக்கூடாது.
பயிற்சியை முடித்து விட்டு சீக்கிரம் கிளம்ப கூடாது. அனைத்து வீரர்களுடனும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும்.
விதிமுறைகளில் தளர்வுகள் ஏதும் வேண்டும் எனில் பயிற்சியாளர், கேப்டன், தேர்வுக்குழு உள்ளிட்டோரின் அனுமதி பெற வேண்டும்.
பிசிசிஐ
முன்னதாக ஆஸ்திரேலிய- இந்தியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
மேலும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் மோசமான செயல்பாட்டின் காரணமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.