விராட் கோலிக்கு சொந்தமான பிரபல ஹோட்டல் மீது அதிரடி நடவடிக்கை - என்ன காரணம்?

Virat Kohli India Bengaluru
By Swetha Jul 09, 2024 06:46 AM GMT
Report

விராட் கோலியின் சொந்த ஹோட்டல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி ஹோட்டல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் விளையாடுவது தவிர மற்ற சில வியாபாரங்கலும் செய்து வருகிறார். அந்த வகையில், விராட் கோலி இணை உரிமையாளராக இருக்கும் ஒன்8 கம்யூன் என்ற உணவகம் பெங்களுருவில் இயங்கி வருகிறது.

விராட் கோலிக்கு சொந்தமான பிரபல ஹோட்டல் மீது அதிரடி நடவடிக்கை - என்ன காரணம்? | Virat Kohli Co Owned One8 Hotel Faces Legal Action

இந்த நிலையில், மிகவும் பிரபலமான இந்த உணவகம் மீது பெங்களூரு நகர காவல் துறை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஓட்டல் மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெங்களூருவில் ஓட்டல்கள் நள்ளிரவு 1 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

விராட் கோலி ஹோட்டலில் தமிழருக்கு அனுமதி மறுப்பு; பிரபலம் வேதனை - எதற்காக தெரியுமா?

விராட் கோலி ஹோட்டலில் தமிழருக்கு அனுமதி மறுப்பு; பிரபலம் வேதனை - எதற்காக தெரியுமா?

என்ன காரணம்?

எனினும், இந்த ஓட்டலின் பார் நள்ளிரவு 1 மணியை கடந்தும் இயங்கி வந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ஒன்8 கம்யூன் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விராட் கோலிக்கு சொந்தமான பிரபல ஹோட்டல் மீது அதிரடி நடவடிக்கை - என்ன காரணம்? | Virat Kohli Co Owned One8 Hotel Faces Legal Action

ஒன்8 கம்யூன் மட்டுமின்றி பெங்களூரு முழுக்க நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக நேரம் சட்டவிரோதமாக இயங்கி வந்த பல்வேறு பார்கள் மீதும் அதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கப்பட்ட ஒன்8 கம்யூன் பெங்களூரு மட்டுமல்லாது.

நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பூனே மற்றும் கொல்கட்டா உள்ளிட்ட இடங்களிலும் கிளைகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.