3 ஆண்டுகளுக்குப்பின் சதம் விளாசிய கோலி - கொண்டாடும் ரசிகர்கள்
4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி சதமடித்து அசத்தியுள்ளார்.
விராட் கோலி
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அஹமதாபாத்தில் கடந்த மார்ச் 9 ஆம் தேதி தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து, இன்று 4 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
சதம்
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதமடித்து அசத்தினார். 3 ஆண்டுகளுக்கு பின் 28வது சதத்தை நிறைவு செய்துள்ளார்.
கடைசியாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக விராட் கோலி சதமடித்திருந்தார். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.