இலங்கைக்கு எதிராக விராட் கோலிக்கு ஓய்வு? ரோகித் முடிவு என்ன?
இலங்கைக்கு எதிரான போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
IND vs SL
ஆசியக் கோப்பை தொடரின் இன்றைய சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதவுள்ளன. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி ரிசர்வ் டேவில் முடிவடைந்த நிலையில்,
இந்திய அணி அடுத்த நாளிலேயே மீண்டும் களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இலங்கை அணியில் பதிரானா, தீக்சனா, வெல்லாலகே உள்ளிட்டோர் தரமான பந்துவீச்சாளர்கள் இருப்பதால்,
கோலிக்கு ஓய்வு
இந்தப் போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விராட் கோலிக்கு ஓய்வு கொடுத்து, ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் சேர்க்க வாய்ப்புள்ளது.
அதேபோல் பும்ராவுக்கும் ஓய்வு கொடுத்து அவருக்கு பதிலாக ஷமிக்கு வாய்ப்பு கொடுக்க கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.