ஆசிய கோப்பை: விராட் கோலி, கேஎல் ராகுல் அதிரடி 100; பாகிஸ்தானுக்கு 357 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டியில் இந்திய அணி 356 ரன்களை குவித்தது.
ஆசிய கோப்பை
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இனைந்து நடத்துகிறது. இதில் கொழும்பு நகரில் உள்ள ஆ.ர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
ஆட்டம் தொடங்கிய 24.1 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதன் காரணமாக காரணமாக ஆட்டம் தடைபட்டது.எ அபோது கே.எல்.ராகுல் 19 ரன்களுடனும், விராட் கோலி 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியானது இன்று பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கியது. தொடக்கம் முதலே ராகுல் - கோலி இணையை பிரிக்க முயற்சித்த பாகிஸ்தான் பவுலர்கள் திணறினார்கள்.
கோலி - ராகுல் அதிரடி
இருவரும் மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸ், ஃபோர் என அடித்து விளாசினர். இதில் 2 சிக்ஸர்ஸ், 10 ஃபோர் அடித்து 100 பந்துகளில் சதத்தை பதிவு செய்து ‘மாஸ்’ காட்டினார் கே.எல்.ராகுல். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 2 சிக்ஸர்ஸ், 6 பவுண்டரிகளை அடித்து 83 பந்துகளில் சதம் விளாசினார்.
இதன் மூலம் அதிவேகமாக 13,000 (267 இன்னிங்ஸ்) ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோலி. அதேபோல சர்வதேச ஒருநாள் போட்டியில் கோலியின் 47வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 356 ரன்களை குவித்தது.
இதன் முடிவில் 106 பந்துகளில் 111 ரன்களுடன் கே.எல்.ராகுலும், 94 பந்துகளில் 122 ரன்களுடன் விராட் கோலியும் விளாசினார். கோலி ராகுல் இணைந்து 253 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.