நள்ளிரவு 1:30 மணிக்கு நடந்த அத்துமீறல்....விராட் கோலியின் பெங்களூரு பப்!! சீல் வைத்த போலீஸ்
பெங்களூரூவில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி'யின் பப்'ற்கு கர்நாடக காவல் துறையினர் சீல் வைத்துள்ளனர்.
விராட் கோலி
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, கிரிக்கெட் போட்டிகளில் கிடைக்கும் பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளார்.
தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களில் அதிக சம்பாதிக்கும் வீரராக இருந்து வரும் வீரராக இருந்து வரும் விராட், துணி brand, உணவகங்கள், pub போன்ற தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார்.
சீல்
அப்படி, அவரின் பெங்களூரு pub ஒன்றிற்கு அம்மாநில காவல் துறையினர் சீல் வைத்துள்ளார்கள். அத்துமீறலில் ஈடுபட்டதன் காரணமாக, இது நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் 6 மாசம் மட்டும் தான் - ஒரு நாள் போட்டியில் இருந்து தூக்கும் கம்பீர்? சிக்கலில் விராட் - ரோகித்!!
கொடுக்கப்பட்ட permission'க்கு மீறி அந்த pub இரவு 1:30 மணி வரை நடந்து வந்ததாக கூறப்பட்டதன் அடிப்படையில் இது நடந்துள்ளது. விராட் கோலியின் ஒன்8 கம்யூன் டெல்லி, மும்பை, புனே மற்றும் கொல்கத்தாவில் பல கிளைகளைக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் திறக்கப்பட்ட பெங்களூரு கிளை, பெங்களூரு ரத்னம் வளாகத்தின் ஆறாவது மாடியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.