இன்னும் 6 மாசம் மட்டும் தான் - ஒரு நாள் போட்டியில் இருந்து தூக்கும் கம்பீர்? சிக்கலில் விராட் - ரோகித்!!
கவுதம் கம்பீர் பல கட்டுப்பாடுகளை வைத்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
விராட் ரோகித் ஓய்வு
டி20 கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, நேற்று கோலாகலமாக நாடு திரும்பியது. இந்தியாவே கொண்டாடி வரும் சூழலில், நட்சத்திர ஆட்டக்காரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார்கள்.
அதே போல ஜடேஜாவும் டி20 வகை போட்டியில் இருந்து அறிவித்துவிட்டார். இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக வரவிருக்கும் கவுதம் கம்பீரின் மறைமுக நெருக்கடியும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில், அடுத்த உலகக்கோப்பை ஒரு நாள் தொடர் வருவதற்க்கு இன்னும் 3 ஆண்டுகள் முழுமையாக உள்ளது.
அப்போது ரோகித் சர்மாவின் வயது 40, விராட் கோலியின் வயது 37 ஆக இருக்கும். அதுவரை அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர்களா? என்ற கேள்வியை தாண்டி, அணி நிர்வாகமும், மற்ற வீரர்களும் அவர்கள் அணியில் இருப்பதை விரும்புவார்களா? என்ற கேள்வியே அதிகம்.
6 மாதமே
டி20 கோப்பையின் போதே, ரோகித் - விராட் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து விளக்கவேண்டும் என்ற கருத்துக்களை எல்லாம் என பார்த்தோம். அதே நேரத்தில் 2025 உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இவர்கள் இருப்பது உறுதி. அதில் முழுவதுமாக கவனம் செலுத்த, கம்பீர் இந்திய கிரிக்கெட் சங்கத்திடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளாராம்.
அதாவது, ரோகித் - கோலி இருவருமே இன்னும் 6 மாதத்திற்கு மட்டுமே ஒரு நாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும் அதனை தொடர்ந்து அவர்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாடிய பிறகு ஒரு நாள் போட்டிகளில் இருந்து விலகவேண்டும் என தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.