ஏர்போர்ட்டில் பெண்ணிடம் விராட் கோலி வாக்குவாதம் - வைரலாகும் வீடியோ

Virat Kohli Australia Indian Cricket Team
By Karthikraja Dec 19, 2024 01:00 PM GMT
Report

பெண் செய்தியாளரிடம் விராட் கோலி வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்டர்-கவாஸ்கர் தொடர்

இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 

virat kohli angry in australia airport

இதில் 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஒரு போட்டியில் இந்தியாவும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது.3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. 

10 பந்துகள் வீசாததால் ஆஸ்திரேலியாவிற்கு 5 கோடி இழப்பு - ஏன் தெரியுமா?

10 பந்துகள் வீசாததால் ஆஸ்திரேலியாவிற்கு 5 கோடி இழப்பு - ஏன் தெரியுமா?

கோலி வாக்குவாதம்

4வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்னில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் மெல்போர்ன் வந்தடைந்தனர். அப்போது விராட் கோலி தனது குடும்பத்தினருடன் வந்த போது அங்கிருந்த ஆஸ்திரேலியா செய்தியாளர்கள், விராட் கோலி குடும்பத்தினரை வீடியோ எடுக்க முயன்றனர். 

virat kohli angry in australia airport

இதை பார்த்து கோபமடைந்த விராட் கோலி, எனது குழந்தைகளுக்கும், எங்களுக்கும் கொஞ்சம் தனியுரிமை தேவை. என்னுடைய அனுமதி இன்றி என்னுடைய குடும்பத்தினரை புகைப்படம், வீடியோ எடுக்காதீர்கள் என கோபமாக கூறினார். 

அப்போது அங்கிருந்த பெண் பத்திரிக்கையாளர் உங்கள் குடும்பத்தினரை படம் பிடிக்கவில்லை என கூறியதையடுத்து கோலி அங்கிருந்து நகர்ந்து சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.