10 பந்துகள் வீசாததால் ஆஸ்திரேலியாவிற்கு 5 கோடி இழப்பு - ஏன் தெரியுமா?
டெஸ்ட் போட்டியில் 10 பந்துகள் வீசாததால் ஆஸ்திரேலியாவிற்கு ரூ.5.32 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பார்டர்-கவாஸ்கர் தொடர்
இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா அணியும், அடிலெய்ட்டில் நடைபெற்ற 2வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளது.
5 கோடி இழப்பு
அடிலெய்ட்டில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் 13.2 ஓவர்களில் நிறுத்தப்பட்டது.
இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்(இந்திய மதிப்பில் ரூ.5.32 கோடி) இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டியை காண 30,145 ரசிகர்கள் டிக்கெட் வாங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய விதிப்படி, 15 ஓவர்கள் பந்து வீசப்பட்டிருந்தால் முழு பணத்தையும் திருப்பி தர தேவை இல்லை. ஆனால் 15 ஓவருக்கு 10 பந்துகள் குறைவாக வீசப்பட்டதால் 30,145 ரசிகர்கள் தங்களது முழு பணத்தையும் திரும்ப பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.