விராட் கோலிக்கு 2வதாக ஆண் குழந்தை; பெயர் இதுதான் - அனுஷ்கா முக்கிய வேண்டுகோள்!
ஆண் குழந்தை பிறந்ததாக அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.
விராட் - அனுஷ்கா
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து 2017ல் திருமணம் செய்தார். 2021ல் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவரது பெயர் வாமிகா.
தற்போது, இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் தனது சொந்த காரணங்களுக்காக முதல் இரு போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது.
2வது குழந்தை
அதன்பின், 3 போட்டிகளில் இருந்தும் விலகினார். அப்போது மனைவி அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் பரவின. ஆனால், அதுகுறித்து எந்தவொரு தகவலையும் விராட் கோலி தெரிவிக்காமலேயே இருந்தார். இந்நிலையில், அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இரண்டாவது குழந்தை பிறந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அதில், கடந்த 15 ஆம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், அந்த தகவலை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகிறோம். குழந்தைக்கு அகாய் என்ற பெயரை சூட்டியுள்ளோம், வாமிகாவின் தம்பியை மகிழ்ச்சியுடன் இந்த உலகத்திற்கு வரவேற்கிறோம்.
இந்த அழகான தருணத்தில் அனைவரின் ஆசீர்வாதத்தையும் வாழ்த்துகளையும் பெற விரும்புகிறோம். தற்போது தங்களுக்கு தனிமை தேவைப்படுவதால் அதை ரசிகர்கள் மதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் இத்தம்பதிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.