ஓய்வு பெற்ற பின் ஆசிரமம் சென்ற கோலி - சாமியார் கேட்ட அந்த ஒரு கேள்வி
விராட் கோலி ஓய்வு பெற்ற பின் ஆசிரமம் சென்று வழிபாடு செய்துள்ளார்.
விராட் கோலி
உத்திரபிரதேசம், விருந்தாவன் என்ற இடத்தில் ஸ்ரீ ஹித் ராதா கேழி குஞ்ச் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் பிரமானந்த கோவிந்த் சரஞ்சி மகாராஜ் என்பவர் சாமியாராக இருக்கிறார். இவரை விராட் கோலி வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின் தற்போது விராட் கோலி முதல் முறையாக ஆசிரமத்திற்கு வந்து வணங்கியுள்ளார். அப்போது கோலியை பார்த்தவுடன் சாமியார் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா என்று கேட்டுள்ளார். அதற்கு மகிழ்ச்சியாக இருப்பதாக கோலி பதிலளித்துள்ளார்.
ஆசிரமத்தில் வழிபாடு
தொடர்ந்து பேசிய அவர்," நாம் தற்போது இருக்கும் நிலைக்கு நாம் செய்த காரியங்கள் தான் தவிர வேறு எதுவும் கிடையாது. நமது இந்தப் பயணம் தெய்வீகத்தை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் அனைத்திற்கும் மேலானது நமது உள்ளம் எவ்வாறு மாறி இருக்கிறது என்பது மட்டும்தான்.
நீ தற்போது எப்படி வாழ்கிறாயோ, அதேபோல் தொடர்ந்து வாழ்வாயாக! உலகத்துடன் எப்போதுமே தொடர்பில் இரு. அதே சமயம் உன் உள்ளத்தையும் மாற்றிக் கொள். புகழுக்கும் பெருமைக்கும் என்றும் ஆசைப்பட வேண்டாம்.
உனது உள்ளம் எப்போதுமே, எனக்கு இந்த உலக விஷயங்கள் எதுவும் வேண்டாம். எனக்கு நீ மட்டும் போதும் இறைவா என்ற நினைப்பில் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.